சாகித்திய அகாடமி விருது ஒரு வகையில் புத்தகம் பிரபலபடுத்துவதற்கான வழியோ என்று எனக்கு தோன்ற ஆரம்பித்தது, அலுவலகத்தில் ஒரு நண்பர் கூறிய பின்.
கணிபொறி எழுத்துகள் கூட இப்பொழுது பேச ஆரம்பித்து விட்ட காலம். படிக்க அப்படி ஒரு அலுப்பு இப்பொழுதெல்லாம். பழைய புத்தகங்கள் விற்கும் ஆழ்வார் இப்பொழுது எந்த இடத்தில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறாறோ? தெரியவில்லை.
சுட்டெரிக்கும் வெயிலில் மதிய உணவுக்காக சென்று கொண்டு இருந்தோம், முன்பு கூறிய நண்பருடன். அவரிடம், நான் சமீபத்தில் வாடகை நூலகத்தில் கள்ளி காட்டு இதிகாசம் எடுத்து படித்து கொண்டிருப்பதாக சொன்னேன். சற்றும் எதிர்பாராத விதத்தில் சொன்னார், 'சாகித்திய அகடமி கெடச்சவுடனெ படிக்க ஆரம்பிச்சிட்ட போல இருக்கு'.
அவருக்கு என் விளக்கம் கொடுத்த பிறகும், நினைத்து கொண்டிருந்த்தேன். நான் ஏன் ஆனந்த விகடனில் தொடராக வந்த போது படிக்கவில்லை?
சாகித்திய அகடமி விருது விளம்பரத்திற்கான ஒரு உத்தியோ? நான் அதில் ஒரு பலி கடாவோ? விளம்பர உத்தியில் விழுந்த ஒரு விட்டில் பூச்சியோ நான்?
Saturday, June 17, 2006
Subscribe to:
Posts (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
அடங்கிப்போன ஒவ்வொருவருக்கும் பேசும் ஆசை வந்தது மண் பிளந்தது நனைந்த சாம்பல் புகை கிளப்பியது தொண்டை செருமிக்கொண்டன அடங்கியவை இப்படி பேசின...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
பழைய நினைவுகளின் மேய்ப்பன் சொன்னான், அப்போதெல்லாம் ஒரே நினைவு ஒன்றைத்தாண்டிய பின் தான் இன்னொரு நினைவு பின் செல்லும் ஒவ்வொன்றுக்கும் இ...