Monday, August 16, 2021

குப்பை

 எவ்வளவு கிறுக்கினாலும் 
கவிதை வரவில்லை 
இதயத்தில் கீறு 
என ஒரு அசரீரி வந்தது
கீறினால் நானே 
வெளிவந்தேன்
வந்தவன் சொன்னான்.. 
வலித்தால் அது கவிதை 
வருடினால் அது மக்கும் 
குப்பை!!!

சண்டை

 தனி அறையில் 
எனக்குள் நான் 
விளையாடிக்கொண்டிருந்தேன் 
அவள் வந்தாள் 
அவளும் எனக்குள் அவனும் 
விளையாடிக்கொண்டிருந்தனர் 
நான் எட்டநின்று 
பார்த்துக்கொண்டிருந்தேன்!!
சண்டை போட்டனர்
நான் தான் காரணம் என்றனர்.

புள்ளி

 பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் நான் 
இருந்தேன் 
புள்ளி எனப்பட்டேன்
விரிந்தேன் 
அண்டம் எனப்பட்டேன் 
இன்னும் விரிந்தேன் 
உலகம் எனப்பட்டேன் 
இன்னும் விரிந்தேன் 
வீடு எனப்பட்டேன் 
விரிந்து கொண்டே இருந்தேன் 
புள்ளி ஆகிவிட்டாய் என்றான் ஒரு குரு 
அது தான் எனக்கு தெரிந்தாகிவிட்டதே 
விரிதலும் சுருங்குதலும் 
தான் வாழ்வு 
மற்றதெல்லாம் எதுவுமாகாத
மகா ஜடங்கள்!!!

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...