Sunday, April 22, 2007

Houston, we have a problem

Apollo - 13. ஹாலிவுட்டில் சக்கை போடு போட்ட இன்னொரு படம் . இது போன்ற படங்கள் எப்போதும் செய்வதையே தான் இதுவும் செய்தது. பார்ப்பவரை சீட்டின் நுனியில் கொண்டு செல்வதை தான் சொல்கிறேன். இது இன்னுமொறு உண்மை சம்பவ தழுவல்.

விண்வெளி மற்றும் அது சம்மந்தபட்ட விஷயங்கள் அங்கங்கே வந்தாலும் 'அட போங்கப்பா' என சொல்லவைக்கவில்லை. நமக்கே மேலே இருப்பவர்களை கீழே கொண்டு வர நாசாவில் நாமும் இருந்திருக்க மாட்டோமா என ஏங்க வைக்கிறார்கள்.

நடித்தவர்கள் அத்தனை பேரையும் டென்ஷன் டென்ஷன், ஒரே டென்ஷனப்பா டென்ஷன் என உலாத்தி விட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கிலோ கணக்கில் நடித்திருக்கிறார்கள். எனக்கு பிடித்தது Ed Harris (role - Gene Kranz). வாங்கிய காசுக்கு மேலாகவே நடித்து விட்டாரோ. அவருக்கு டயலாக் கொடுத்தவர், அவர் பங்குக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார் (வசனம் கொஞ்சமாக இருந்தாலும்). எழுதிய கோடில் பிரச்சினை வந்தாலே குய்யோ முய்யோ என அலறும் இடத்தில் இருந்து கொண்டு, நாசாவில் பிரச்சினை தீர்க்கும் இவரை பார்த்தால் (நடிப்பு தான், இருந்தாலும் அவர் நடித்திருப்பது ஒரு நிஜ மனிதரை) சரி, இப்படி ஒரு நாள் இருந்து பார்க்க தோன்றுகிறது. இவரின் சில வசனங்கள்,

"We've never lost an American in space, we're sure as hell not gonna lose one on my watch! Failure is not an option."
"Let's work the problem people. Let's not make things worse by guessing. "
"I don't care about what anything was DESIGNED to do, I care about what it CAN do."
"Goddammit! I don't want another ESTIMATE! I want procedures! NOW! "
(உபயம் - Wikiquote)

டாம் ஹேங்ஸுக்கு, யாராவது, ஒரு படத்திலாவது சுமாராக நடிக்க சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும். நடிக்கும் எல்லா படத்திலும் அசத்தலாக நடித்து producer வயிற்றில் பாலை வார்த்து கொண்டே இருக்கிறார்.

ரோன் ஹோவர்ட் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. இது மூன்றாவது (A Beautiful Mind, Da Vinci Code). மூன்றுமே தழுவி எடுக்கபட்ட படங்கள். ஆஸ்கார் வாங்கி (for 'A Beautiful Mind'), என்னோட படம் எது வந்தாலும் கண்டிப்பாக பார்க்கலாம் என்று உத்திரவாதம் கொடுக்கிறார். டான் ப்ரவுனின் அடுத்த நாவல் Angels & Demons எடுக்க போகிறார் போல.

எங்களுடையது வெற்றியடைந்த தோல்வி என முடிக்கிறார்கள். நிஜத்திலும் இது ஒரு அக்மார்க் வெற்றி. ஒரு அழுத்தமான திரை பதிவு.

2 comments:

Anonymous said...

//டாம் ஹேங்ஸுக்கு, யாராவது, ஒரு படத்திலாவது சுமாராக நடிக்க சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும்.//

என்ன...குவார்ட்டர் போட்டிருந்தீர்களா ? இதைப் பாரும் - http://www.imdb.com/name/nm0000158/awards

நடிகர் திலகமய்யா நடிகர் திலகம்.

Lakshman said...

இல்லங்க. எழுதறதுக்கு ஒரு பெப்சி தான் போட்டேன். சொல்ல வந்ததை கொஞ்சம் முழுங்கி விட்டதன் விளைவு, வேறு அர்த்தம் கொடுத்து விட்டது.

மாற்றி விட்டேன், இப்படி...

//டாம் ஹேங்ஸுக்கு, யாராவது, ஒரு படத்திலாவது சுமாராக நடிக்க சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும். நடிக்கும் எல்லா படத்திலும் அசத்தலாக நடித்து producer வயிற்றில் பாலை வார்த்து கொண்டே இருக்கிறார்.//

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...