Wednesday, May 30, 2007

பேர கேட்டவுடனே சும்மா அதிருது இல்ல

ரஜினி - ஒரு சினிமா ரசிகனாக என்னை எப்போதும் ஏமாற்றாத ஒரு நடிகர். டிரயிலருக்கே சூடம் ஏற்றி, பேப்பர் கிழித்து போட்டு, தலைவா என எட்டு கட்டையில் அலறும் ரசிகனை இன்றும் பெற்றிருக்கும் வயது வந்த நடிகர். டெக்னிக்கலாக கலாசும் மக்கள் இவர் படத்தில் வேலை செய்திருந்தாலும், ரஜினி என்ற ஒரு சொல் மட்டுமே, தயாரிப்பாளரின் லாபத்துக்கு உத்திரவாதம். இவரின் மேனரிசங்களை, இப்போதைய தளபதிகள் முட்டி மோதி செய்தாலும், அட போப்பா உனக்கு வேற வேல இல்ல என சொல்ல வைக்கும் அளவுக்கு, தன்னை ஆழமாக பதித்தவர்.

இப்போது, சிவாஜி. இந்த படம், வெற்றியோ தோல்வியோ. ஆனால், முதல் ஒரு வாரமும், முதல் காட்சியும்!!! ஆச்சரியங்கள் மட்டுமே.

எதிர்பார்த்து காத்திருக்கும் பல பேர்களில் ஒருவன் டிரய்லர் பார்த்த உற்சாகத்தில் எழுதியது. கலக்குங்க boss!!!

2 comments:

Anonymous said...

//பேர கேட்டவுடனே சும்மா அதிருது இல்ல" //

ஆமாமா

"என்னை ஏம்மா கறுப்பா பெத்த???
வெள்ளையா பொறந்தா அழுக்காயுடுவே பாரு அதாம்பா"

இது எப்படி இருக்கு??

Lakshman said...

நச்சுன்னு தான் இருக்கு Priya. இப்போ நான் செக்க செவப்பே..... சீக்கிரம் வாங்க பாஸ்...

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...