இந்த வருடமாவது தொடர்ந்து எழுத ஆசை. ஆனால் இதை புத்தாண்டு உறுதிமொழியாக எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் நடக்கபோவதென்னவோ ஒன்று தான்.
கடந்த ஆண்டு, அப்பப்பா. பலத்த திருப்பங்களும், அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த படம் பார்த்த உணர்வு. 2008 தூவிவிட்ட சில கடின விதைகள் 2009ல் தான் முளைக்கவே போகின்றன என்று பல நிபுணர்கள் வேறு குறி சொல்கிறார்கள். அடுத்த வருடம் கரடுமுரடாக இருக்கபோவதென்னவோ நிஜம். தட்டுதடுமாறி விழாமல் இருந்தால் சரி, நாடாக இருந்தாலும், நாமாக இருந்தாலும்.
நாட்டுல ஏழை ஏழையாவே இருக்கான், பணக்காரன் பணக்காரனாகிட்டே வர்ரான். இப்படி ஒரு படத்தில் வசனம் வரும். இப்போதைய நிலை நிற்காமல் தொடர்ந்தால் அந்த வசனம் சீக்கிரமாகவே பொய்யாகும்.
என் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள். கல்யாணமாகிவிட்டது. எப்போதும் தெரியாத தக்காளி, வெங்காய விலைகளெல்லாம் இப்போது தெரிகிறது. கூடவே விம் பார் போட்டால் பாத்திரங்கள் பளிச்சென ஆகுமென்ற பிரம்ம ரகசியம் வேறு தெரிந்து தொலைத்திருக்கிறது. சில விஷயங்களை வாழ்க்கையில் ரொம்ப நாள் தள்ளி போட முடியாதென்பதென்னவோ உண்மை.
2008 களேபரங்களுக்கு நடுவே Global Warming கொஞ்சம் தூரமாக நிற்கவைக்கபட்டுள்ளது. இப்போதைய Global Recession எல்லாம் 1 வருடமோ 2 வருடமோ இல்லை குறைவாகவோ தன் கோர முகத்தை காட்டிவிட்டு நம்மையெல்லாம் பழைய பாதையில் விட்டுவிடும். ஆனால் GW, slow எமன். சீக்கிரமாக Global Recession முடித்துவிட்டு, நல்ல செய்திகளோடு தொடர 2009 முதல் புள்ளி வைக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Wednesday, December 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
சூரியன்
குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின் ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...
-
காதல் என்றால் கனவு மட்டுமல்ல, கடமை என்று நினைத்திருந்த காலங்களில் மனபாடம் செய்து வைத்திருந்த விஷயம் கீழே இருப்பது. தாஜ் மகால், இதற்கு பின் ப...
-
இதோ இன்னொரு படம் (பழையது தான்!!!வருடம் 1993). இந்தியாவின் உள்ளே சில நேரங்களில் வாழ்க்கையை தொட்டு படம் எடுக்கிறார்கள். வெளியே பல படங்கள். இவர...
-
எப்பொழுது விகடன்.காம் போனாலும், ஆவி மட்டுமே படிப்பது வழக்கம். நேரம் நகரவே மாட்டேன் என்றால் மட்டுமே ஜுவி, அவி, சுவி :) எல்லாம் படிப்பேன். அப...
No comments:
Post a Comment