Thursday, April 19, 2007

Forward

எப்பொழுதும் forward மெயில்களை பார்த்து விட்டு delete செய்வது வழக்கம். இன்றைக்கு வந்த இந்த கவிதை (கவிதை நடையில் இல்லாவிட்டாலும்), அப்படியில்லாமல், இங்கே பதிய வேண்டும் என தோன்றியது.

கணிணி கனவாண்களே
கொஞ்சம் செவி கொடுங்கள்
இங்கே சில பேர் உங்களுக்காக
காத்து கொண்டிருக்கிறார்கள்.

இவன்(ள்) எங்க கிட்ட சிரிச்சு பேசியே பல நாளாகுது
உன் அப்பா, அம்மா இப்படி.
நாம பீச் எப்போ கடைசியா போனோம்னு மறந்தே போச்சு
உன் மனைவி.
அப்பா, நீ என் கூட வெளயாட வர வேண்டாம், என்க்கு சாதமாச்சும் ஊட்டி விடறயா
உன் மகனோ மகளோ

இத்தனையும் நீயாக இழந்ததா
இல்லை இழக்க பட்டதா?

கணிணி அதிகம் கலக்காத சில பேர் சொல்லுவதை கேள்.

தினமும் 8 மணி நேர கணிணி கலவி போதும்.
விட்டு விடுதலை பெறு, கணிணியும் இளைப்பாரட்டும்.
ஸ்மைலியில் மட்டுமே சிரிக்காமல்
உதடுகளில் சிரிப்பதை
உனக்குள் தேடியெடு.
யாகு மெஸஞ்சரில் காதல் செய்யாமல்
புல்வெளிகளில் காதல் செய்.
ஒரு முறையாவது இன்லேன்ட் லெட்டரில்
நண்பனுக்கு கடிதம் போடு.
ஈ-புக் தேடாமல்
பேப்பர் புக் தேடு.
கூகுள் துணையில்லாமல்
வேலை செய்ய பழகு.
மேட்ரிமோனியலில் ஜாதக பொருத்தம் பார்ப்பதை நிறுத்தி
உன் குடும்ப ஆஸ்தான ஜோஸியருக்கு கொஞ்சம் வேலை கொடு.
வெப் கேம் துணையில்லாமல்
நேரில் உன் துணையிடம் களி.
டவுன்லோட் செய்யாமல்
திரைபடம் பார்த்து பழகு.
வாரத்தில் ஒரு நாளாவது கணிணிக்கு
விரதம் அனுஷ்டித்து விடு.
வாழ்க்கை வெறுத்திருக்கும் உன் பக்கத்து வீட்டு
நூலகரை சந்தோஷபடுத்து.
மாதத்தில் ஒரு முறை
மளிகை கடைக்கு செல்
இன்டர் நெட்டில் ஆர்டர் செய்யாமல்.
கொஞ்சம் கொஞ்சமாக
இறந்து கொண்டிருக்கும்
செய்திதாள்களுக்கு உயிர் கொடு.
தினமும் ஒரு
பூ பார்த்து பழகு.
காலை சூரியனுக்கு
குட் மார்னிங் சொல்லி
கண் காத்து கொள்.
ஜிம்மில் மட்டும் உடல்வளைக்காமல்
சமையல் அறையில்
மனைவிக்கோ அம்மாவிற்கோ
பாத்திரம் கழுவி, காய் கறி வெட்டி கொடு.

இன்டர்நெட்டுக்கு அப்பால்
ஒரு நந்தவனம் பூத்து குலுங்குவது
தெரிய சாத்தியம் இல்லை தான்.

திருவிணையாக்குவது முயற்சி மட்டுமே
முயன்று பார்.

கணிணி நம் குழந்தைகள் விளையாடும் பலூன் போல
அளவாக ஊதி, அழகாக பாதுகாக்கலாம்.

பலவை உதைத்தாலும், சில விஷயங்கள் சரி தானோ?

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...