Monday, April 16, 2007

Yuri Gagarin

யாரிது என்று சிலரை பற்றியே நமக்கு தெரிந்து கொள்ள தோன்றும். Google அவர்களுடைய லோகோவை ஏப்ரல் 12 அன்று இவருக்காக மாற்றியபோது, விக்கிபீடியா உதவியுடன் இவரை பற்றி தேடினேன்.

இப்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் மராத்தான் ஒடி கொண்டிருப்பதை, அட இவ்வளவு தானா என நிறைய பேர் நினைப்பதில் ஆச்சரியமில்லை. சம்மருக்கு குளிர் பிரதேசங்களுக்கு போவதெல்லாம் அலுத்து விட்டது. நேராக வான்வெளிதான், இப்போதைய பணம் படைத்தவர்கள்.

1961, மனிதர்கள் பூமிக்கு அப்பால் என்ன என்பதை குறு குறுவென யோசித்து கொண்டிருந்த கால கட்டம். ரஷ்யா, சில மிருகங்களை அனுப்பி பரிசோதித்தது எல்லாம் போதும், அடுத்த கட்டம் மனிதன் தான் என முடிவெடுத்த வருடம். இவர், பூமியை தாண்டி எட்டி சென்று நம் உலக உருண்டையை, உருண்டையாக முதலில் பார்த்த முதல் மனிதன். சாதாரண மனிதன் கண்டம் விட்டு கண்டம் தாண்டினாலே ஜென்ம சாபல்யம் என்று நினைத்த காலத்தில், இவரை எல்லாம் ரஷ்யா தலை மேல் வைத்து கொண்டாடியது தவறே இல்லை. ஒரு ஊருக்கே இவர் பெயர், விண்வெளியின் கொலம்பஸ் என்ற பட்டம், இப்படி பல.
இந்த விஷயத்திற்கு பின் அலறி அடித்து கொண்டு மனிதனை விண்வெளிக்கென்ன, நிலாவுக்கே அனுப்புவோம் என கங்கனம் கட்டி கொண்டதெல்லாம் சரித்திரதில் அழுத்தி எழுதபட்டது. ஆர்ம்ஸ்ட்ராங் முதல் காலடி தடமும், இவரின் முதல் பூமி தரிசனமும் மனிதனின் சாதனைகளில் ஆச்சரியமான முதல்கள்

When I orbited the Earth in a spaceship, I saw [for the first time?] how beautiful our planet is. Mankind, let us preserve and increase this beauty, and not destroy it!" - Yuri Gagarin

4 comments:

Anonymous said...

Nanba,

Nice post

Vj

Lakshman said...

Nandri nanba

Anonymous said...

இதை குகிள் போட்டிருப்பதற்கு காரணமாய் தோன்றுவது Sergey Brin ஒரு ரஷ்யர்.

Lakshman said...

Sergey Brin மேட்டர் எனக்கு புடிபடவே இல்ல. இப்போ புரியுது.

Thanks for the pointer.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...