Monday, October 01, 2007

ஜூன் போனால்...

உன்னாலே உன்னாலே பித்தம் தெளிந்தபாடில்லை நிறைய பேருக்கு. ஸ்பென்ஸரில் கூட்டமாய் இருந்த நேரத்தில், எங்கோ ஒரு செல்லில் ஜூன் போனா டோன் வர, சில பேர் தங்கள் செல்லை எடுத்து பார்த்தார்கள்.

3 வாரம் இந்தியா பார்க்க போயிருந்தேன். சக் தே வெற்றி பெற்று, ஹாக்கி அணி ஆசியா கோப்பை வெற்றி பெற்று, ஜெய் ஹிந்த் மாறி சக் தே இந்தியா சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். திரும்ப வரும் போது தோனி, கையில்லா பனியனுடன் உலக கோப்பை வாங்கி இன்னமும் இந்தியா என்ற ஜுரத்தை தன் பங்குக்கு ஏற்றி விட்டிருந்தார். எப்படியோ, அடிக்கடி இப்படி செய்து புண்ணியம் கட்டி கொள்கிறார்கள். பின்னாலிருக்கும் விளம்பர உலகம் படு ஜோராக இயங்கி கொண்டிருக்கும்.

3 வாரத்தில் பெரிதாக சுற்றவில்லை. வீட்டு மாடியை கூட ஏறி பார்க்காமல் சுறுசுறுப்பாக தூங்கி வழிந்தது தான் அதிகம். கிடைத்த கேப்பில், கண்ணுக்கு காண கிடைத்த இந்தியாவை பார்த்த போது, மாற்றம் கொள்ளாமல் அப்படியே இருந்த உணர்வு. அதே 'ரியல்ல்லி' பெண்கள், 'வாடா மச்சான்'கள், 'இன்னாபா' ஆட்டோகாரர்கள், 'வடாம் போடல்லியோ' மாமிகள், 'கேது நீச்சத்துல இருக்கான்' ஜோசியர்கள், 'உங்க வூட்டுகாரர் வரலியா' கோவில் கடைகார அம்மாக்கள், 'பிளீஸ் சார்' டிகிரி வாங்கி வியர்வை வழிந்து லோன் விற்கும் ரெப்கள், 'சார், கிங்ஸ் வாங்கலியா இன்னிக்கு?' பொட்டி கடைகாரர்கள், 'முன்னாடி போய்யா' கண்டக்டர்கள், 'பின்னாடி போய்யா' டிரைவர்கள், 'நாளைக்கு ஜெயந்தி மிஸ் லீவ், ஹைய்யா ஜாலி' பையன்கள், 'நான் கேட்கிறேன்' அரசியல்வாதிகள், 'நடிக்க வரலேன்னா படிக்க போயிருப்பேன்' நடிகமணிகள், 'இது ஒரு வித்தியாசமான படம்' டைரக்டர்கள், 'இடிக்கிறான் பாரு எருமையாட்டம்' ரங்கநாதன் தெரு திருமதிகள், 'வேலையே குடுக்குறதில்ல' டீம் மெம்பர்கள், 'வேலையே செய்யுறதில்ல' டீம் லீடர்கள், 'ஆணை இடு தலீவா' தொண்டர்கள்... இப்படி மனிதர்கள் அப்படியே, அழகாய், அவர்களாய்.

கலாம், போதும்பா சொல்லி விட்டார். பழைய பட்டிக்கு வந்து விட்டார். அவர் கண்ட கனவு பலித்ததா, தெரியவில்லை. ஆனால், நிறைய பிரயத்தனபடுகிறார்கள், நனவாக்கி விட. 2020 கஷ்டம் தான். ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு வருடம். 40 ($ vs Rupya) கிட்டதட்ட 20க்கு வந்தாலே, பாதி வல்லரசு.

அமெரிக்காவில் தொண்டை கிழிய Go green கோஷம் போடுகிறார்கள். நம் ஊரில் ஒரு கோடு கூட கிழிக்கவில்லை (அல்லது எனக்கு தெரியவில்லை). சீக்கிரம் பச்சை போடும் அளவுக்கு நம் இந்திய நிலைமை இல்லை. ஆனால் அப்படி ஆவதற்கு, நிறைய வருடங்களும் இல்லை.

இந்தியாவில் இருந்து திரும்பியாகி விட்டது. ஏதோ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் பார்த்து பார்த்து ஏர் ஹோஸ்டஸ் தேர்ந்தெடுத்திருந்ததால், இந்திய பிரிவு பெரிதாய் பாதிக்கவில்லை.

2 comments:

ஜெ. ராம்கி said...

'கேது நீச்சத்துல இருக்கான்' ohooooo? :-)

Lakshman said...

thala,

No uL arththam, veli arththam, side arththam please... :)

- ஸ்ருதி

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...