Tuesday, October 23, 2007

வலயபட்டி தவிலே தவிலே

...
நீ நெருங்கும் போதே
கரண்ட் ஏறுதே
உங்க ஊரு
கல்பாக்கமா?

நரம்பெல்லாம்
முறுக்கேறுதே
ஏண்டி நீயும்
மணப்பாறையா?
...

அழகிய தமிழ் மகனில் இப்படி வார்த்தைகள் வடித்து விட்டிருக்கிறார் நா. முத்துகுமார். இந்த பாட்டில் ரஹ்மான் சாயல் அடிக்கவில்லை என தோன்றுகிறது ('நீ நாதஸ்வரம் போல வந்தால் நாபிகமலம் நானா, நீ ஏழு ஸ்வரம் போல வந்தால் எட்டா ஸ்வரம் நானா' தவிர). ஆனால், படத்தில் எனக்கு பிடித்த பாடல் இது மட்டும் தான். அசத்தலான நரேஷ் ஐயர். ரஹ்மானின் செல்ல பிள்ளை என்பது சரியாய் தானிருக்கிறது. நடுவில் வரும் கோரஸும் அழகு. பாட்டு முழுவதும் fresh feel. உஜ்ஜயினின் (பெண் பாடகி) முதல் வரிகள் அடிக்கடி கேட்பீர்கள். நீங்கள் இந்த பாட்டு கேட்கும் போது, பக்கத்தில் யாருமிருந்தால், தலையை முன்னும் பின்னும், இசைக்கு தோதாக ஆட்டி விடுங்கள். இல்லையென்றால், நீங்கள் ஏதோ சோகத்தில் இருப்பதாய் நினைத்து விட வாய்ப்புண்டு. நா. முத்துகுமார் வரிகள் சூப்பரென பலர் சொல்லி கேட்டதில், பெரிதாய் இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை.

எல்லா புகழும் - முதல் பாடலை ரஹ்மான் பாடியிருக்கிறார். திப்புவோ, ஷங்கர் மஹாதேவனோ பாடியிருந்தால் தேவலாமோ என தோன்றியது. பாடல் நன்றாக இருந்தாலும், ரஹ்மான் குரல் விஜய்க்கு சரியாகுமா என தெரியவில்லை (தலைவருக்கு சரியாகியதே என்றால் - அதுவும் இல்லையென்பது என் கருத்து). பாடலாக அது கலக்கல். ஆனால், விஜய்யின் முதல் பாடலாக, ரஹ்மானின் குரல், கொஞ்சம் இடிக்கிறது.

மற்றபடி, மிச்ச சொச்ச பாடல்களை அடிக்கடி கேட்டு பிடிக்க வைத்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.

சொல்ல வேண்டிய விஷயம் - இந்த படத்தில் ஷ்ரேயாவின் ரேட்டிங் எகிற போவதில் விஜய்க்கே சந்தேகம் இருக்காது.

No comments:

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...