Sunday, July 30, 2006

(தி). மு. க

அது தான் கலைஞர். இப்படி முடிந்துள்ளது, மு.க. ரஜினி ராம்கி எழுதியுள்ள அடுத்த புத்தகம்.

புத்தகத்தின் ஆரம்பமே, அடடா ஜால்ரா அடிக்க போறாங்கன்னு நெனச்சா, நல்ல வேளை அது இல்லே. பூ மாறி பொழியும் வார்த்தைகளோ, நெஞ்சை பிழியும் உணர்ச்சி பிழம்புகள், கழகத்தின் கொள்கைகள், திராவிட கோஷம் இப்படி எதுவும் இல்லை. இது இல்லாமல் எழுதியதற்காகவே ஒரு சபாஷ்.

பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர் இவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் முடியாது. அதனால் தானோ என்னவோ, இவர்கள் சம்மந்தபட்ட பகுதிகள் படிப்பதற்கு மிகுந்த சுவாரசியம். இது அத்தனையும், கலைஞர் துடிப்புடன் செயல்பட்ட காலங்கள். மிக வேகமாக படிக்க முடிந்தது. அதன் பின், சிறிது தொய்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு வேகமான இளைஞர், அவரின் வாழ்க்கை ஓட்டம். இன்று அவர் ஒரு முதியவர். ஆனால், அரசியல் சாராத ஒரு இளைஞர் அவரை பற்றி எழுதுகிறார்.

அரசியல் இல்லாமல் ஒரு அரசியல்வாதி பற்றி ஒரு நல்ல ஒரு பதிவு.

1 comment:

பாலசந்தர் கணேசன். said...

புத்தகம் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது உங்களுடைய விமர்சனமும் மற்றும் முத்துவின் விமர்சனமும்.

சூரியன்

 குளிரும் வெயிலும் வெம்மையும் மனதின்  ஓட்டைக்குள் ஒளிந்திருக்கும் உயிர் நாடி என நினைக்கிறேன். ஒவ்வொன்றின் தாக்கமும், வீச்சும் மனிதனின் வெளிப...